“தீபாவளி அன்றும் இன்றும்”
தீப ஒளியால் நிறைந்த இல்லம் அன்று
தீபமே இல்லா வெளிச்ச இரவு இன்று
சிகைக்காயும் எண்ணெய் தேய்ப்பும் அன்று
சிகைக்கழுவியும் தூவிகுளியலும் இன்று
இனிப்பு காரமும் பண்டமாற்றமானது அன்று
இணையம் இனிப்பு பரிமாறுகிறது இன்று
குடும்ப உறவு கூடி மகிழ்ந்தது அன்று
கூடும் உறவிலும் தனித்து இருப்பது இன்று
புட்டும் சாம்பாரும் மணந்தது அன்று
புலனமும் முகநூலும் நிறையுது இன்று
வடையும் பாயாசமும் வக்கணையாய் அன்று
வசதியாய் வீடு வரும் உணவுகள் இன்று
பட்டிமன்றம் பார்த்தே பகல் கழிந்தது அன்று
பகல் பொழுது பாராமல் இரவு விழிக்குது இன்று
அலமாரியில் வாழ்த்து அட்டைகள் அன்று
நிகழ்நிலையில் வாழ்த்து வைப்பது இன்று
காலங்கள் மாறினாலும் மாறாத மகிழ்ச்சி தித்திக்கும் திருநாளில் உள்ளத்தில் எழுச்சி திக்கெட்டும் பரவட்டும் திருப்தியான வளர்ச்சி தீராத வளத்துடனே திகட்டும் குளிர்ச்சி!! தீப ஒளித் திருநாள் வாழ்த்துகள்!!!