சாதியக் கொடுமைகளை சாடிய சாதனையாளனே
சாக்கடை தனத்தை அகற்ற போராடிய போராளியே
சுயமரியாதையை பெருக்க விளைந்த சுயம்புவே
சூரத் தனமாய் சுழன்றடிக்கும் சூறாவளியே
பெண்விடுதலை பேசிய பெரியவனே
பேசா மடந்தைகளை பேச வைத்த பெருமை பெற்றவனே
பெண் முன்னேற்றத்தை செயல்படுத்த வந்த சீரான
பெருமை கொண்டது உன்னால் பெண் சமுதாயமே
திராவிடம் காக்க உதித்த திருமகனே
திங்களையும் ஞாயிறு ஆக்கும் வல்லமை பெற்றவனே
தீராத் தாகம் கொண்ட திருவருட்செல்வனே
தீராது எத்தனை நம்மின் புகழுரை உரைப்பினும நின் புகழுரையே
பகுத்தறிவு பகலவனாய் பட்டொளி வீசியவனே
பாங்காய் எடுத்துரைத்து பாடம் புகட்டியவனே
பகட்டு வாழ்க்கையை எதிர்த்து எளிமை கொண்டவனே
பாசாங்கு செய்பவர்களை வண்ணமாய் சாடியவனே
மூட நம்பிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க முனைந்தவனே
முற்றும் திறப்பதில்ல துறவு என்ற முழக்கம் செய்த வனே
கடவுளை கொண்டு காசு சுரண்டுவதை காரி உமிழ்ந்தவனே
கடவுள் மறுப்பு ஏன் என்று காட்டமாக உரை நிகழ்த்தியவனே
சமூகத்தினை சீர்திருத்திய சாதனை சிற்பியே
சாகாது உன் புகழ் வையத்தில் நித்தமே
இறவாப் புகழ் கொண்ட இளமைத் தமிழனே
ஈடில்லா நின் பெருமை போற்றும் இவ்வையமே!!